"சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் ஆளுநரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை" - அமைச்சர் சேகர் பாபு
சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் ஆளுநர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன் சாலை பகுதிகளில் புதிய பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின் பேட்டியளித்த சேகர் பாபு, வீதிமீறல் நடந்தது தெரியவந்தாலும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆளுநர் கூறுகிறாரா? தீட்சிதர்களுக்கு என தனி சட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
Comments